போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஓந்தாச்சிமடம் பகுதியில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் சம்பவதினத்தன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சம்பவம்

இதன்போது மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது மோதி விபத்துக்குள்ளானதையடுத்து பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை

இச்சம்பவதுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் முன்னிலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்.
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri