யாழில் காதல் முறிவால் யுவதி எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியில், காதல் உறவில் ஏற்பட்ட முறிவால் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த, 26 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த இவர், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
அந்த இளைஞன் திடீரென மனம் மாறி வேறு ஒரு பெண்ணை காதலித்ததால் குறித்த யுவதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யுவதியின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |