கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு(Photos)
வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு மூன்று லட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்ட கோழி மற்றும் ஒரு ஆடும் நேற்று முன்தினம் (09.01.2023) திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் திருட்டு
மின்சாரம் துண்டிக்கப்பட்டிந்த வேளை இரவு 9 மணியளவில் உரிமையாளர் அயலில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சென்றிருந்ததை அவதானித்தவர்கள், கடையை உடைத்து திருடியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மற்றும் தருமபுரம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri