யாழில் கடத்தப்பட்ட வியாபாரி: பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் வியாபாரியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வியாபாரியை இன்று(02.09.2023) முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனமொன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவரை தாக்கிவிட்டு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பழ வியாபாரத்தில் ஈடுபட்டடு வந்த 23 வயதுடைய வியாபாரியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும்,3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
