சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்: நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ள தமிழ் பாடசாலை

Mullaitivu G.C.E. (O/L) Examination Northern Province of Sri Lanka
By Shan Dec 01, 2023 01:18 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதால் பாடசாலை நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டுசுட்டான், மாங்குளம் பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இந்த கரிப்பட்ட முறிப்பு அரசியல் தமிழ் கலவன் பாடசாலையானது அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகின்ற ஒரு பாடசாலை ஆகும்.

வெளியான சாதாரண தர பெறுபேறுகள் : வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை

வெளியான சாதாரண தர பெறுபேறுகள் : வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை

பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

இங்கு மாணவர்களுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்: நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ள தமிழ் பாடசாலை | A Tamil School With 100 Percent Success Rate

இதேபோன்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த பாடசாலைக்கு மிகவும் நெருக்கடியான போக்குவரத்து சேவைகளுக்கு மத்தியில் வருகை தந்து அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றிய 10 மாணவர்களில் அனைத்து மாணவர்களும் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்

அந்தவகையில்,

குகநேசன் யாழின்பன் 7A 2 B

உதயந்தி கோபிதன் 6A 2C S

விக்கினேஸ்வரன் அபிராமி 5A 3B

தேவராஜ் வினோதா 5A 2B C S

பத்மரஞ்சன் திருசாளினி 3A 3B 3C

செல்வராசா பவிது 3A 4B C S

தயானந்தசெல்வன் தனோஜா 2A 2B 3C 2S

சுதாகரன் சுகந்தியா 2A 3B 3C S

பத்மரஞ்சன் மதுமிலன் 2A B 5C S

பத்மநாதன் நிருபா A 2B 4C 2S

ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 

உயர்தர பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை

இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தங்களுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றி.

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்: நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ள தமிழ் பாடசாலை | A Tamil School With 100 Percent Success Rate

அத்துடன் விசேடமாக கோண்டாவில் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களாக தமக்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், இதன் ஆசிரியர்கள், இதனை ஒழுங்குபடுத்தியவர்கள் மற்றும் நிதி வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மாணவர்கள் தாங்கள் உயர்தர கல்வியை கற்பதற்கு இங்கு பாடசாலை இல்லாமல் பல மயில் தூரங்களுக்கு அப்பாலுள்ள பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியதாக இருப்பதாகவும், தமது பாடசாலையில் உயர்தர பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்குகின்ற இந்த பாடசாலையிலே சாதனையை நிலைநாட்டிய இந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் சமூகத்தினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மூவரிற்கு தடை - செய்திகளின் தொகுப்பு

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மூவரிற்கு தடை - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US