அநுர அலைக்கு சாதகமாகியுள்ள தமிழ் தேசிய பிளவு!
தமிழ் தேசியப்பரப்பில் மூத்தக்கட்சிகளின் ஒற்றுமையில் பிடிமானம் இன்மையானது தமிழர்களை பெரும் குழப்பநிலைக்கு கொண்டுசென்றுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்த இந்த பிளவுநிலை தற்போது நாடாளுமன்ற தேர்தலை மையமாக கொண்ட அரசியல் நகர்வில் மேலோங்கியுள்ளது.
தமிழ் தேசியம் என்ற கொள்கையை தூக்கிப்பிடித்துக்கொண்டு முன்னிற்கும் அரசியல் தலைமைகளின் போக்கு தற்போது சுயநலத்தை பின்கொண்டுள்ளது என மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் மேலோங்கியுள்ளன.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தமிழ் மக்கள் மத்தியில் உறுதியான சிவில் சமூக அமைப்புக்கள் ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் அந்த உறுதிக்கு பொதுக்கட்டமைப்பு வழிவகுத்தது. அதுவே இரண்டு இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்தது.
எனினும் இன்று சிவில் சமூகங்களின் எழுச்சியால் உருவான பொதுக்கட்டமைப்பும் கூட பிளவுநிலை கண்டுள்ளது.
இவ்வாறான பின்னடைவுகள் என்பது தென்னிலங்கை அரசியலை தமிழ்த்தேசிய பரப்புக்குள் உள்ளிழுக்க வழிவகுப்பதாக எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தற்போது அரசியலில் உருவாகியுள்ள அநுர அலையை வலுப்படுத்த உறுதுணையாவதாகவும் ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசியலில் பொதுதேர்தலில் தமிழ் அரசியலின் சாத்தியபாடையும், அதேபோல தமிழ் அரசியல் முறுகல் நிலைகளையும் தொடரும் காணொளி ஆவணத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
