ட்யூப் லைட்டை விழுங்கிய தும்பறை சிறைக்கைதி : வைத்தியசாலையில் அனுமதி
தும்பறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை(நீ்ண்ட மின்குமிழ்) விழுங்கியதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் கண்டிக்கு அருகில் இருக்கும் தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் குறித்த கைதியிடம் கைத்தொலைபேசி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சிறைக்காவலர்கள் இரண்டு பேர் குறித்த கைதியை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்ததுடன் கடுமையாக தாக்கியும் உள்ளனர்.
இதன் காரணாக கடும் ஆத்திரமடைந்த சிறைக் கைதி அந்த அறையில் இருந்த டியூப் லைட்டை கழற்றி கடித்து விழுங்கியுள்ளார்.
அதனையடுத்து, வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி காரணமாக குறித்த கைதி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
