உலக சந்தையில் எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
செங்கடலில் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க போர்க் கப்பல்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளது.
சடுதியான விலை உயர்வு
யேமனை மையமாகக் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக, செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்குவைத்து ஹவுத்தி (Houthi) கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான பரபரப்பான சர்வதேச கடல் வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் செங்கடலில் மோதல் ஆரம்பிப்பதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் நெருக்கடி ஏற்படும் அபாயமுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
