யாழில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: பெற்றோரை சமரசப்படுத்திய பொலிஸார்
யாழ்ப்பாணம் வலிகாம கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டமையும் தெரியவந்தது.
நீதிமன்ற நடவடிக்கையை தவிர்த்த பொலிஸார்
இந்நிலையில் இரு தரப்பினரையும் அழைத்த மானிப்பாய் பொலிசார் மாணவன் பாதிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை பின்பற்றாமல் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலிகாம வலயக் கல்விப்பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பொலிஸார் சமரசம் செய்தமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்டமை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டாலும் பாடசாலையுடன் இணைந்து மாணவனின் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பியமை ஒரு தரப்பினரை காப்பாற்றும் நோக்கில் உள்ளதா என சந்தேகம் எழுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
