யாழில் போதைக்கு எதிராக மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு!
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
சங்கானையில் புதிதாக ஒரு மதுபான சாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், குறித்த மதுபானசாலை அமைக்கவுள்ள இடத்திற்கு அருகாமையில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மத ஸ்தலங்கள், குடிமனைகள் காணப்படுகின்றன.
எனவே அந்தப் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதிக்கு மனு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "மதுசார விலைகளை குறைத்து எமது சமூகத்தை அழிக்க வேண்டாம், போதையற்ற வாழ்வே ஆரோக்கியத்துக்கான வழி, எமது சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவை தானா, இளைய சமூகமே மதுவை உங்கள் கைகளில் எடுக்காதீர், சிறுவர்களையும் மகளிரையும் மதுவுக்கு அடிமைப்படுத்தாதே" என கோஷமிட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
