எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு வரும் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் கொவாக்ஸ் வசதி மூலம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கை எதிர்பார்க்கிறது என்று உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன் ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கறுப்புச் சந்தையிலிருந்து தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்யாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நம்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) அண்மையில் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்,
முதல் அளவைப் பெற்றவர்கள் இரண்டாவது அளவுக்காக ஆறு மாதங்கள் காத்திருக்கலாம்
என்றும் அவர் கூறியுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri