ஜனாதிபதியினால் சட்டவாதிகள் ஐவருக்கு வழங்கப்பட்ட அந்தஸ்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe), சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே குறிந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் சிறப்பான சேவை
சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023ஆம் ஆண்டின் 26ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |