அவுஸ்திரேலியா செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு இன்று புறப்படவிருந்த விமானத்தை இரத்து செய்ய நேரிட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களத்தின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு
அதற்கமைய, அவசர தேவையின் அடிப்படையில் பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்ப ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏனைய பயணிகள் நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam