பல கோடி பெறுமதியான தங்கப்பாளங்களுடன் இலங்கையர் ஒருவர் கைது
தங்கப்பாளங்களுடன் வெளிநாடொன்றில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு கோடி 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
16 தங்கப்பாளங்கள்
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் இன்று அதிகாலை இந்த தங்க தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பொருட்களுக்குள் இருந்த இந்த தங்க தொகையை பயண பொதியில் இருந்து வெளியில் எடுத்து, பொருட்களை எடுத்து செல்லும் ட்ரொலியில் மறைத்து வைத்து விமான நிலையத்திற்கு வெளியில் கொண்டு செல்ல முயற்சித்த போது, சுங்க அதிகாரிகள் சந்தேக நபருடன் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து 16 தங்கப்பாளங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சுங்கப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
