கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளியை மோதிவிட்டு தப்பிச் சென்ற பட்டாரக வாகனம்
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று(20) முற்பகல் 11.00 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இயக்கச்சி பகுதியில் இருந்து இயக்கச்சி சந்திநோக்கி பயணித்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இயக்கச்சி பகுதியை சேர்ந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காண முயற்சித்துவருகின்றனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri