தமிழர் பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தாய்!(Photos)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 60 வயது முதியவரான பெண் ஒருவரை பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறை ஒன்றில் நீண்ட காலமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏறாவூர் 3ஆம் பிரிவு வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 60 வயதுடைய ஸாகிலா உம்மா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அறை
ஒரு வெற்றுக்காணியில் சிறைச்சாலைகள் போல பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அறையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி சிறைக் கைதியை போன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரான பெண் வெளியில் சென்று கதைப்பதாகவும் அதன் காரணமாக அவரது
மகள் அவரை அடைத்து வைத்துள்ளதாகவும் கம்பி கூட்டின் கதவில் நின்று கொண்டு கதவை
திறக்குமாறு தினமும் அழுது புலம்பிவருவதாகவும் தெரியவருகின்றது.





Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
