நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்!
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, விசேட அதிரடிப்படையின் தலைமையில், விசேட பொலிஸ் குழுக்களை களமிறக்கி பாதாள உலகக்கும்பல்களை தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளர்.
இதன் பிரகாரம், தப்பியோடிய மற்றும் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக்கும்பல் அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
