மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்
கம்பஹா, வெயங்கொடை, அலவ்வ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்படி சிறுவன் தனது வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் கையை வைத்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கிக் கீழே மயங்கி விழுந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
பின்னர், சிறுவனின் தந்தை உடனடியாகச் சிறுவனை வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சேர்த்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வதுபிட்டிவல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri