மன்னாரில் சுகயீனமுற்ற யானை குட்டி மீட்பு
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் 2 வயது மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை குட்டியை, நேற்று (17.05.2024) காலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள், யானை ஒன்று சுகயீனமுற்ற நிலையில் காணப்படுவதையறிந்து குறித்த அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விவசாயிகளின் அச்சம்
இந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மிருக வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சுகயீனமுற்று காணப்பட்ட யானை குட்டியை பார்வையிட்டு உரிய சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இவ்வாறான காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு அவை விவசாய காணிகளுக்குள் நுழைவதால் விவசாயிகள் அச்சமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு வேண்டும்: அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |