யாழில் போதை மாத்திரைளுடன் கடை உரிமையாளர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
50 மாத்திரைகள்
சோதனையின்போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 மாத்திரைகளும் ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளர்.

இதனையடுத்து உரிமையாளரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தான் போதை மாத்திரைகளை உட்கொள்வதாகவும் தெரிந்த நபர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 150 மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும் அவற்றில் சிலதை விற்று விட்டதாகவும் ஏனையவற்றை தானே உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri