கால்நடை வளர்ப்புகளில் தீவிரமடையும் நோய்த்தொற்று (photos)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் மாடுகளுக்கு பெரியம்மை நோய்த்தொற்று பரவலடைந்துள்ளது.01
தற்போது வடக்கில் கால்நடைகளுக்கான தொற்றாக காணப்படும் பெரியம்மை நோய்த் தாக்கம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பரவியுள்ளமையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திலும் இனங்காணப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சாளம்பன், வித்தியாபுரம், சம்மளங்குளம் மற்றும் மாங்குளம் போன்ற பகுதிகளை சேர்ந்த 5 பண்ணையாளர்களின் கால் நடைகளில் பெரியம்மை தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை தகவல் வெளியிட்டுள்ளது.

பெரியம்மை நோய்த்தொற்று
இதேவேளை துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியிலும் கால்நடை பண்ணையாளர் ஒருவரின் கால்நடைகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேச்சல் தரவை இல்லாத நிலையில் நாங்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றோம், இந்த நோய்த் தாக்கம் தொடர்பில் கால்நடை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை என பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூன்று மாடுகளில் இருந்து தற்போது 5 மாடுகளுக்கு பரவியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொற்றின் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam