கனேடிய மாகாணமொன்றில் வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு
கனேடிய(Canada) மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) ஊழியர்களுக்கான மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு சம்பளம்
இதுவரை காலமும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.75 டொலர்களே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3.9 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது, பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கனடாவில் குறைந்த சம்பளம் வழங்கும் மாகாணமாக காணப்பட்ட பிரிட்டிஸ் கொலம்பியா, அதிகளவு சம்பளம் வழங்கும் மாகாணமக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam