யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (27.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த 59 வயதுடைய செல்வரதி விதிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபரது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் 2016 ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்றும், அதற்கு பின்னர் மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |