தேர்தல்கள் ஆணையகத்திற்கு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள கோரிக்கை
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள் ஆனையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தேர்தல்கள் ஆனையத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''உலகம் இன்று எதிர்நோக்கும் தலையாய பிரச்சினைகளில் காலநிலை மாற்றமும் இதர சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் முதலிடத்தில் உள்ளன.
சுற்றுச்சூழல் பிரச்சினை
நாடுகளில் நிலவும் வளப்பற்றாக் குறைவு, வறுமை, பஞ்சம், பட்டினி போன்றனவற்றின் அடிப்படைக் காரணங்களாகவும் இவை உள்ளன.
காலநிலை மாற்றங்களுக்கும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் நாடு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நிறைவேற்றவும் வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கே உரியதாகும்.
இவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பலவும் விழிப்புணர்வு பெற்று வினைத்திறனுடன் செயலாற்றத் தொடங்கியுள்ளன.
காலநிலை மாற்றம்
இலங்கையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது.
இலங்கையின் நாளைய அரசாங்கத்தை இன்று தேர்தலில் ஈடுபடும் கட்சிகளே அமைக்கப் போகின்றன. அந்த வகையில், தேர்தல்களை நடாத்துகின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் கட்சிகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டிய கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
