சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறி வரும் மாணவர்களின் மனநல பாதிப்பு
தற்போதுள்ள கல்வி முறை, மற்றும் போட்டி உட்பட்ட சூழ்நிலைகள் காரணமாக பாடசாலை மாணவர்களின் மனநலம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, மாணவர்களின் மன ஆரோக்கியத்தில் தலையிட்டு, அவர்களை பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து தீர்வை முன்வைக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தவறான முடிவுகள், அதற்கான முயற்சிகள் மற்றும் சுய தீங்கு போன்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன, இந்த நிகழ்வுகள் தினசரி அறிக்கையிடப்படுகின்றன.
தீர்வுக்கான நடவடிக்கை
இதனை மையப்படுத்தி பாடசாலைகளையோ, ஆசிரியர்களையோ, பெற்றோரையோ குறை கூறுவது சரியானதல்ல.
குற்றங்களைச் சுமத்துவதற்குப் பதிலாக, குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அடிப்படைக் காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை, குழந்தைகளைப் பாதிக்கும் தற்போதைய மனநலப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மட்டும் முழுப் பொறுப்பேற்க முடியாது.
அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் கூட்டாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிக்க வேண்டும்” என ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |