பண மோசடி வழக்கு: Onmax நிறுவனம் முன்வைத்துள்ள கோரிக்கை
Onmax நிறுவன பிரமிட் திட்டத்தின் மீது பணத்தை முதலீடுச் செய்து இழந்த வைப்பாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் அதனை மீளச் செலுத்த நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இன்று (28.05.2024) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியூடாக இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாடு இன்று(28.05.2024) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Dilina gamage) முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அதன் பணிப்பாளர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன(Anuja premaratna) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
61,000 வைப்பாளர்கள்
நிறுவனத்தில் பணத்தை வைப்பில் செலுத்திய 61,000 வைப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாகவும் செலுத்த வேண்டிய தொகை 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் பிரேமரத்ன நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வங்கிக் கணக்குகள் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தடை நீக்கப்பட்டால், இரண்டு வருடங்களில் அதுத் தொடர்பான பணத்தை வைப்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்த முடியும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு 25 கோடி ரூபாவை திருப்பி செலுத்தவுள்ளதாக பணத்தை இழந்த வைப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியுள்ளார்.
இங்கு பங்குத்தாரர்கள் செலுத்த வேண்டிய பணத்தின் அனைத்து விவரங்களையும் பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |