அனுரகுமார திசாநாயக்கவிடம் அமெரிக்க தூதர் விடுத்த கோரிக்கை
அமெரிக்கக் கொள்கைகள் முதலீட்டுத் திட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் உதவிகள் குறித்து சந்தேகம் இருக்கும்போதெல்லாம் தம்மை தொடர்புகொள்ளும்படி ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தாம் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இதன்போது இரண்டு தரப்பினரும் தவறான தகவல்களை களைந்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அனுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க தூதர் சந்தித்தார். இதன்போதே இந்த விடயம் கூறப்பட்டதாக ஜூலி சுங் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரபலமான ஒரு கட்சி

இலங்கையை பொறுத்தவரை, ஜே.வி.பி ஒரு பாரிய பிரசன்னத்தைக் கொண்ட பிரபலமான ஒரு கட்சியாகும்.
இந்தநிலையில், தாம் இலங்கைக்கு வந்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள், மாணவர்கள் குழுக்கள் மற்றும் மதக் குழுக்களைச் சந்திப்பதை உறுதிசெய்யுமாறு தமது பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

எந்த ஒரு குழுவைச் சந்திக்காமலோ அல்லது யாரையும் அந்நியப்படுத்தாமல் இருப்பது முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்திப்பை அடுத்து ஜே.வி.பியுடன் நல்ல புரிதல் உள்ளது என்றும் ஜே.வி.பி
பொருத்தமான அரசியல் கட்சி என்றும் ஜூலி சுங் தெரிவித்தார்.