தோனி ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டை தொலைத்துவிட்டார் என்ற உண்மையை அவர் உணர வேண்டும் என முன்னாள் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பெடுத்தாளர் மெத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது வர்ணனை செய்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த போட்டியில் 183 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி மிகவும் மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.
காலம் எப்போதோ வந்துவிட்டது
அதிரடியாக துடுப்பெடுத்தாடினால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தோனி, மிகவும் மெதுவான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், வர்ணனையாளராக பேசிக்கொண்டிருந்த ஹெய்டன், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார், இனி அவ்வளவுதான், இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், தோனி, அணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என்பதையும் ஹெய்டன் கூறியுள்ளார்.
மெத்யூ ஹெய்டன், 2008 முதல் 2010 வரை மூன்று வருடங்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அதன் பின்னர் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |