தென் பகுதியில் முதன் முறையாக மீட்கப்பட்ட அரிய வகை புலம்பெயர் பறவை
ஹிக்கடுவ கடற்கரையில் சுகயீனம் அடைந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை புலம்பெயர்ந்த பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன்போது, மீட்கப்பட்ட பறவை Shearwater என அழைக்கப்படும் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு மேற்கே உள்ள வெப்பமண்டலப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது என ஹிக்கடுவ வனவிலங்கு பூங்காவின் காப்பாளர் அசங்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெற்கு பிராந்தியத்தில் முதல் தடவை
இந்த வெப்பமண்டலப் பறவையானது மனித வாழ்விடங்களிலிருந்து விலகி, பாறைப் பிளவுகள் அல்லது மணல் மேடு குழிகளில் முட்டையிடும் எனவும் குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகள் பறக்கும் வரை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், Shearwater பறவையானது நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்வை என்பதுடன் கடலில் மிதக்கும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் என்றும் குணவர்தன கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹிக்கடுவ கடற்கரையில் மீட்கப்பட்ட Shearwater, அத்தகைய குப்பைகளை உட்கொண்டுள்ளதன் காரணமாகவே சுகயீனம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெற்கு பிராந்தியத்தில் Shearwater இனப்பறவையை காண்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
