வானில் நிகழவுள்ள அரியவகை மாற்றம் : இலங்கையர்களுக்கும் வாய்ப்பு
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களின் அரிய சீரமைப்பு இந்த நாட்களில் வானில் நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 29 மற்றும் பெப்ரவரி நடுப்பகுதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 90 நிமிடங்களுக்குள் இந்த வான அணிவகுப்பை சிறப்பாகக் காணலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடிய அளவு
இந்த நாட்களில் 6 கிரகங்களின் அரிய சீரமைப்பின் கண்கவர் காட்சியை அவதானிக்க முடியும்.
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் இவ்வாறு அவதானிக்கப்படுவதாகவும் வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடிய அளவுக்கு பிரகாசமாக இருப்பதைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |