திருகோணமலையில் கண்டறியப்பட்ட அறிய வகை விலங்கு
திருகோணமலை - மூதூர் பகுதியில் "fishing cat" எனும் புலி இனமொன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப் புலியானது சுமார் 3 அடி நீளமுடையதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூதூர் பகுதியில் இந்த புலியானது அச்சுறுத்தலாக இருந்ததோடு மக்களுக்கு இடையூறாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் 64 ஆம் கட்டை, ஜபல் நகரைச் சேர்ந்த நபரொருவர் வீட்டுக் காணியில் பொறியொன்று வைத்துள்ள நிலையில் குறித்த புலி அகப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு
அறிவிக்கப்பட்டதையடுத்து "Fishing cat " வகையைச் சேர்ந்த புலியை கந்தளாய்
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
