சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை
ரமழான் மாதத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஹோட்டல்கள், பேக்கரிகள், மற்றும் பழக்கடைகளில் இன்று(11.02.2025) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மையை கண்டறியவும் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் நோக்கிலும் மேற்குறித்த இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பொதுச் சுகாதாரத்துக்கு பொருத்தமான வகையில் உணவு தயாரிப்பது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
மேலும், இப்பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam