அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி சார்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாடு பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய நிலையில், வழமையாக சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் சமர்ப்பித்தால் நாடு பேரழிவை சந்திக்கும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(02.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் பயனில்லை
அவர் மேலும் கூறுகையில்,“நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த இரு வருடங்களில் பாரியளவில் அதிகரித்துள்ளது.
எனவே இவற்றை கருத்திற்கொண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் எந்தவிதமான பயனும் இல்லை.

நாம் அரசியல்வாதிகள் என்பது உண்மையே, நாம் எதிர்க்கட்சியில் இருப்பதும் உண்மையே. இதற்காக அரசாங்கம் கொண்டுவரும் அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் எதிர்க்கப்போவதில்லை.”என கூறியுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam