இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரான்சில் இடம்பெற்ற போராட்டம்(Photos)
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று(30) பிரான்ஸ் நாட்டிலும் தமிழர் அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீதிக்காக, கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களுக்கு துணையாக இந்த போராட்ம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, தாய்மார்களின் நீதிக்கான போராட்டமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (30 ) தமிழர் தாயகத்தில் இடம்பெற்றிருந்தது.
நீதிக்கான போராட்டம்
தாயகத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
இதன் ஒரு அங்கமாக பிரான்சில் தலைநகர் பரிசின் Boulevard du Montparnasse பகுதியில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி, நாடாளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கை
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியாக இருப்பதுடன், இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும்.
மேலும், அனைத்துலக குற்றவியல்
நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கம் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது
தமிழர்களின் கோரிக்கையாகவுள்ளது.