சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 முதல் ஜூன் மாதம் 05 வரை நடைபெறவுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற உலகளாவிய கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்துள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாட்டின் உலகளாவிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணும் இறுதி இலக்காக பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளைப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அதிகாரிகள், அரச உயரதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
