சுகாதாரத்துறையில் சிக்கல்: எதிரணியின் சவாலுக்கு முகம் கொடுக்க தயார்
எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள உத்தேசித்துள்ளதாக கூறப்படும் குற்றப்பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டசாலை தொகுதியில் நேற்று (16.07.2023) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியள்ளார்.
சுகாதாரம் தொடர்பான பொறுப்பு
மேலும் அவர் கூறியுள்ளதாவது, சுகாதாரத்துறை தொடர்பாக திட்டமிட்டு பொய் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் அவை அனைத்தையும் நிரூபிக்கவுள்ளது.
தான் இதுவரை 8 அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சராக நாட்டில் 22 இலட்சம் மக்களின் சுகாதாரம் தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |