வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (25.04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஹரிபிரசாத் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
