யாழில் நீதிமன்ற விசாரணையில் இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(04.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார்.
மருத்துவ பரிசோதனை
இந்நிலையில் அவர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இதனால் அவரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேக நபரை நாளைய தினம் (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan