வீட்டை விட்டு செல்லாத நபர் கொரோனா தொற்றால் மரணம்
அலவ்வ சுகாதார பிரிவுக்குட்பட்ட யட்டிகல்ஒலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் அந்த சடலம் குருணாகல் வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அந்த வீட்டில் ஒருவரும் கொரோனா தொற்றவில்லை. அத்துடன் உயிரிழந்த நபர் வீட்டில் இருந்து வெளியே சென்று எவருடனும் தொடர்பு கொள்ளாதவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கொரோனா தொற்றியமை தொடர்பில் உரிய முறையில் கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் தகன நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
