யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது(Photos)
யாழ்ப்பாணம் - வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா நேற்று (27) கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக் பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பொதிகளில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
