கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த சந்தேகநபர் கைது
பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த இன்னொரு வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக திருடி, தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான வன்முறை சம்பவத்தின் போது பொலிஸ் திணைக்களத்தின் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் களவாடப்பட்டிருந்தன.

| ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் கைது |
விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் கடந்த நாட்களில் வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடமிருந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam