யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் போதைப்பொருள் கடத்தல்! ஒருவர் கைது
சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற நபர் ஒருவரை இன்று (17.06.2023) கைது செய்துள்ளதாக
வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri