புகைப்படத்தில் இருக்கும் நபரை கண்டால் உடன் அறிவிக்கவும்..!
பொகவந்தலாவ (Bogawantalawa) - கியூ தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரு நாட்களாக காணவில்லை.
43 வயதுடைய எஸ்.திருச்செல்வம் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்றையதினம் (26) காலை 09 மணியளவில் வீட்டில் இருந்து அண்மையில் உள்ள பொகவந்தலாவ நகரத்திற்கு செல்வதாக சொல்லிச் சென்ற குறித்த நபர் காலை 11 மணியளவில் தனது வீட்டுக்கு தொலைபேசியூடாக அழைத்து பேசிய நிலையில் அதன் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது.
தகவல் வழங்கல்
பொகவந்தலாவ - சென் ஜோன் டிலரி பகுதியில் அவரை அறிந்தவர்கள் சிலர் இறுதியாக கண்டதாக தெரிவித்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நேற்றையதினம் முதல் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன், காணாமல் போன குறித்த நபர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு உறவினர்கள் கோருகின்றனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம், 0741285831, 0761523576, 0778216579
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam