லண்டன் - வோல்தம்ஸ்ரோவிலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம்
லண்டன் (London) - வோல்தம்ஸ்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம் இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 19ஆம் திகதி (19.08.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 03ஆம் திகதி (03.09.2024) பூங்காவனத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இசைக்கச்சேரி
இந்நிலையில் ஸ்ரீ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழா எதிர்வரும் 01ஆம் திகதி (01.09.2024) அன்றும் தீர்த்தத்திருவிழா 02ஆம் திகதி (02.09.2024) அன்றும் நடைபெறவுள்ளது.
மகோற்சவப் பெருவிழாவில் கொடியேற்ற தினமான 19, 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் புலவர் இராமலிங்கத்தின் சமய சொற்பொழிவு இடம்பெற்ற நிலையில் தேர்த்திருவிழா நாளான எதிர்வரும் முதலாம் திகதியன்று (01.09.2024) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இம்மகோற்சவ திருவிழாவில் நாதஸ்வர வித்துவான்களான ஈழத்தைச் சேர்ந்த கே. பஞ்சமூர்த்தி குமரன், பாலமுருகன், நாகதீபன் ஆகியோரின் இசைக்கச்சேரியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
