கிளிநொச்சியில் சூட்சமமான முறையில் கசிப்பு உற்பத்தி: பொலிஸார் சுற்றிவளைப்பு
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் இன்றைய தினம் (23.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா பொலிஸாரால் அழிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை நாளையதினம் ( 24.12.2023) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam