பாதையை கடக்க முற்பட்டவர் வாகன விபத்தில் உயிரிழப்பு
தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா - ரதல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது.
ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் என்ற 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வேலைக்குச் செல்வதற்காக அவசரமாகப் பாதசாரிக் கடவையில் கடந்த அவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித் தள்ளியுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த நபர், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan