நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலகளாவிய தரவுகளின்படி, உலகில் ஒரு நபர் ஒரு வாரத்திற்கு 05 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண்பிளாஸ்டிக்கை(ஒரு கடன் அட்டையின் அளவு) உட்கொள்கிறார் என ஊட்டச்சத்து நிபுணர் ரொசான் டெலா பண்டார, தெரிவித்துள்ளார்.
இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நமது உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் கலப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி ஒருவர் வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் என்பது ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு மாதத்தில் ஒருவரால் 20 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் வருடத்திற்கு 250 கிராம் நுகர்வு செய்யப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
மருத்துவ சங்கத்தின் செயலாளர் சஜித் எதிரிசிங்க சுட்டிக்காட்டு
இதேவேளை, நைலோன் துணி மற்றும் நைலோன் மீன்பிடி வலைகள் மூலம் நுண்; பிளாஸ்டிக் நம் உடலுக்குள் செல்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் சஜித் எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான மைக்ரோபிளாஸ்டிக் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் நம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோபிளாஸ்டிக்கை அதிகமாக உட்கொண்ட பிறகு, அதன் விளைவு புற்றுநோயாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் எனவே, பிளாஸ்டிக் பொருட்களை தாங்களாகவே அழிக்காமல், மறுசுழற்சி செய்யும் மையங்களில் ஒப்படைக்குமாறு, மருத்துவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையிலான நச்சு இரசாயனங்கள் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றன என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் சஜித் எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 2 நாட்கள் முன்

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
