வவுனியாவில் 80,000 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
வவுனியா - தம்பனைச்சோலை பகுதியில் 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை இன்று(18.02.2024) வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட சோதனை
இந்நிலையில் அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam