புதுக்குடியிருப்பில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(30.07.2024) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, திம்பிலி பகுதியினை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதல் என்ற பெயரில் காதலித்து தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அங்கு சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri