யாழில் ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக இன்று மதியம் 1.20க்கு ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம்1.21க்கு கலைந்து சென்றுள்ளனர்.
கோரிக்கைகள்


இதன்போது, இலங்கை வங்கித் தலைவர் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றார் சட்டம்
எங்கே?,
பொதுமக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும். இலங்கை வங்கி தலைவரின் சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்த வேண்டும்,
இலங்கை வங்கி தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்கள்
தொடர்பான விசாரணைக்காக தடயவியல் கணக்காய்வொன்றை ஆரம்பிக்க வேண்டும் போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை வங்கி ஊழியர்கள் தாங்கியிருந்தனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam